மகரம் ராசி அன்பர்களே,
இன்று பொறுமையாக இருந்து எந்த ஒரு பணியிலும் வெற்றி காண்பீர்கள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். தவறாக விமர்சித்த ஒருவர் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துங்கள். பிள்ளைகள் விரும்பி கேட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள் சமையலின் போது கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களை எதிர்த்துப் பேச வேண்டாம்.
இன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம் .உங்கள் செயல்களை மற்றவர்கள் விமர்சனம் செய்தால் பெரிது படுத்த வேண்டாம். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். கேட்ட இடத்தில் பண வரவு கிடைக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவதால் வெற்றி காண முடியும். உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் கவனம் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கு இரவு நேர பயணம் சந்தோஷத்தை கொடுக்கும். இன்று மாணவர்கள் ஓய்வாக காணப்படுவீர்கள். விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். சிறந்த மாணவர்கள் என்ற பெயரை எடுக்க முடியும். இன்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : ஆறு மற்றும் ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்