மகரம் ராசி அன்பர்களே,

இன்று சந்தோஷமான மனநிலையில் காணப்படுவீர்கள். பிறருக்கு முடிந்த அளவில் உதவிகளை செய்வீர்கள் . வியாபாரம் செழிக்க புதிய அனுகூலம் உருவாகும். எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர் செல்லும் யோகம் உள்ளது. உத்தியோகத்தில் அடிக்கடி விடுப்பு எடுக்கும் சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

பயம் வேண்டாம் யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். கேலி கிண்டலுக்கு ஆளாகாதீர்கள். விளையாட்டுக்கு ஏதாவது பேசி மற்றவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்ளக்கூடும். உங்கள் மீது பழி விழலாம். பெண்கள் ஆழ்ந்த சிந்தனையில் காணப்படுவீர்கள். யோகமான நாளாக அமைத்துக் கொள்ள முடியும்.

முழு முயற்சியால் வெற்றி பெற முடியும். பணிச்சுமை அதிகரிக்கும். இன்று மாணவர்கள் தன்னிச்சையாக செயல்படுவீர்கள். காரியங்கள் சூடுபிடிக்க துவங்கும். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். பொறுப்பாக காணப்படுவீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் மஞ்சள் நிறம்