கும்பம் ராசி அன்பர்களே,

இன்று சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் வெற்றி பெறுவது நல்லது. நீங்களாகவே எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பொதுப் பணியில் ஈடுபடுவீர்கள். நேரம் காலம் பார்த்து எந்த பணியிலும் ஈடுபடுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் போட்டியால் லாபம் குறையலாம். அனைவரையும் அனுசரித்து செல்ல பாருங்கள். சோதனைகளை கடந்தால்தான் சாதனைகள் செய்ய முடியும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. அன்பை வெளிப்படுத்துங்கள், அமைதியை வெளிப்படுத்துங்கள். அது வெற்றியை கொடுக்கும்.

இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வத்தின் அருள் துணையாக இருக்கும். நம்பிக்கையுடன் செயல்களில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். முன் கோபம் வேண்டாம். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். விளையாட்டு துறையிலும் கலை துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி பெறும் சூழல் உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: இரண்டு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்