மகரம் ராசி அன்பர்களே,

இன்று சிக்கல்கள் விலகி சிரமங்கள் தீர்ந்து விடும். அதிகாலையிலேயே நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். இன்று சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சுயதொழில் நல்ல வகையில் கை கொடுக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று தொழில் வியாபாரம் சிறந்து காணப்படும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பண விஷயத்தில் முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்திடுங்கள். இன்று பெண்களுக்கு நல்லதே நடக்கும். நல்ல பெயர் கிடைக்கும். திருமண வரன்கள் அமையும். இன்று மாணவர்கள் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிதானமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெற முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்