கும்பம் ராசி அன்பர்களே,

இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடந்த கால நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள். வருமானம் திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்க வேண்டியது இருக்கும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீண் பேச்சை தவிர்த்திடுங்கள். உறவினர்கள் வழியில் நல்லது நடக்கும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் வெற்றி பெற முடியும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. பெண்களுக்கு சுய தொழிலில் லாபம் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுக்கலாம். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று மாணவர்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். குழப்பங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்