சென்னை கிண்டி மக்கள் மாளிகையில் இன்று நடைபெற்ற புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ஆவார். தனது மகன் அமைச்சராகப் பொறுப்பேற்றது குறித்துப் பேசிய தனபால், தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தனக்கு வழங்கிய வாய்ப்பினைப் போலவே, முதலமைச்சர் விஜய் தனது மகனுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் வழங்கிய இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, நேர்மையுடன் செயல்பட்டு மக்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்ய வேண்டும் என்று தனது மகனுக்குத் தனபால் அறிவுரை வழங்கினார்.

இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக, அந்த கட்சியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும் முன்னாள் சபாநாயகர் தனபால் இச்சமயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.