தவெக அமைச்சரவையில் மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, மூத்த அமைச்சர் செங்கோட்டையனின் இலாகா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற போது, மிக முக்கிய துறையான நிதித்துறை செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவர் நிதித்துறையிலிருந்து மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, செங்கோட்டையனுக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞரும் தவெக முக்கிய நிர்வாகியுமான மரிய வில்சன் புதிய நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மிக முக்கியமான நிதித்துறை செங்கோட்டையனிடமிருந்து பறிக்கப்பட்டு, வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கடும் “அதிருப்தியை” ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காகப் பேசப்பட்டு வருகிறது.
