மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நாக் அஸ்வின் டைரக்டில் கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற படம் “மகா நடி”. இத்திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றார். அதே போன்று தெலுங்கு மொழியில் சிறந்த படம் எனும் தேசிய விருதையும் இப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து “ப்ராஜெக்ட் கே” எனும் அறிவியல் புனைவுப் படத்தை மிகப் பிரபாண்டமாக டைரக்டு செய்து வருகிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.

இப்படத்தில் பிரபாஸ், தீபிகாபடுகோனே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சங்கராந்தி(பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு 2024 ஆம் வருடம் ஜனவரி 12ஆம் தேதி “ப்ராஜெக்ட் கே” படம் வெளியாவதாக படக்குழு போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.