தமிழ் திரையுலகில் கடந்த 2001 ஆம் வருடம் மின்னலே எனும் திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் பாடல்கள் இசை அமைத்திருக்கிறார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, ஷாம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

இறுதியில் இவரது இசையமைப்பில் தி லெஜண்ட் என்ற படம் வெளியாகியது. சமீபத்தில் இவர் நடத்திய இசை கச்சேரி மக்களிடம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகள் சினிமா துறையில் இசையமைப்பாளராக கலக்கி வந்தாலும் இதுவரையிலும் ஒரு பாடல் கூட ஹாரிஸ் பாடவில்லை     ஆனால் அக்கேள்விக்கு திருப்திகரமான பதில் கிடைக்குமா எனில் கிடையாது. ஒரு உண்மையான பாடகர் எப்படி அருமையாக பாடுகிறாரோ அப்படி என்னால் பாட முடியும் எனும் நம்பிக்கை எனக்கு வந்தால் தான் நான் பாடுவேன் என தெரிவித்துள்ளார்.