பீகார் மாநிலம் பாட்னாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை வெளிப்படுத்தும் வகையில், காவல் நிலையத்திற்கு மிக அருகிலேயே துணிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, மனேர் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி சஞ்சய் குமார் சோனி தனது கடையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே, பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். அவரிடமிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. படுகாயமடைந்த சஞ்சய் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
मनेर, पटना में घर के बाहर व्यवसायी को बेख़ौफ़ अपराधी गोली मार कर आराम से चलते बने।
"जोड़ी मोदी- नितीश के हिट हो गइल.." वाले गाने के साथ आनंद लीजिए!
क्योंकि,
बिहार में बहार है!
नीतीशे कुमार है!!— Priyanka Bharti (@priyanka2bharti) January 10, 2026
இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகள், போலீசாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு அருகிலேயே இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறினாலும், குற்றவாளிகளின் துணிச்சல் மனேர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
