உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், போலீசாரிடையே நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு போலீசில் சேர்ந்த ஒரே பேட்ஜில் தேர்ச்சி ஆண்டைச் சேர்ந்த ஒருவர், ஒரே வகுப்பில் பயிற்சி பெற்ற பெண் போலீசாரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கசயா நகரத்தில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதில் கணவர் பாலியா பகுதியிலுள்ள தலைமை போலீஸ் அலுவலகத்தில் பணிசெய்து வந்தார் . மனைவி, அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு காவல் நிலையத்திலும் பணிபுரிந்து வந்தனர்.
சமீபத்தில் தனது மனைவி மற்றொரு ஆண் போலீசாருடன் தனிமையில் இருப்பதாக சந்தேகித்த கணவர், அவசர சேவை எண் 112-ஐ அழைத்து, “மனைவியை யாரோ அறைக்குள் பூட்டி வைத்திருக்கிறார்கள், கதவு திறக்கவில்லை” என புகார் செய்தார்.
அதனையடுத்து, கசயா போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீஸ் உதவி நிலையம் சேர்ந்த குழு விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றது. பல முயற்சிக்குப் பிறகு கதவைத் திறந்த அவர்கள், உள்ளே பெண் போலீசாருடன் மற்றொரு ஆண் போலீசாரும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
UP पुलिस के तीन जवानों के बीच ऐसा इश्किया घमासान हुआ कि अनवांटेड मुहब्बत की कहानी सीधे थाने पहुंच गई! सिपाही पति ने पत्नी को उसके प्रेमी के साथ कमरे में रंगे हाथों पकड़ लिया..और फिर जो हुआ, वो किसी टीवी सीरियल की स्टोरी से कम नहीं!
👮♂️ पति बना जासूस, पत्नी ने किया लॉक, प्रेमी… pic.twitter.com/xucRsrxIKb
— TRUE STORY’s (@TrueStoryDelhi) September 1, 2025
“>
பின்னர், அந்த பெண் காவலரும், அவரது கணவரும், அதேபோல் அந்த ஆண் போலீசாரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூவரும் ஒரே டிபார்மென்ட்யை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக எழுத்துப்பூர் புகார் எதுவும் பெறப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
