ஒடிசா மாநிலம் தலைச்சார் பகுதியில் நேற்று நிகழ்ந்த கார் விபத்து, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில், ஒரு கார் மிகவும் வேகமாக வந்தது. அந்த வேகத்தில், இருசக்கர வாகனங்களில் சென்ற பலரை நேருக்கு நேர் மோதி தள்ளிவிட்டு சென்றது. இந்த திடீர் விபத்தில் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கினர்.
तालचेर में बेकाबू कार का कहर, 15 लोग घायल
तालचेर (ओडिशा) में शर्मा चौक से आईटीआई चौक रोड पर एक तेज रफ्तार सफेद कार ने कई पैदल यात्रियों और दोपहिया वाहनों को टक्कर मार दी, जिससे कम से कम 15 लोग घायल हो गए.#Odisha #Talcher #CCTVFootage #RoadAccident #ATReel pic.twitter.com/LCSxEDjeP2
— AajTak (@aajtak) September 1, 2025
“>
இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் கார் கொடூரமாக வாகனங்களை மோதி செல்கிற காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. விபத்து நடந்ததிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் அந்த காரை ஓட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
