பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சுங்கச்சாவடியில் வெள்ளை பதானி அணிந்த ஒரு நபர், வாகன ஓட்டிகள் சுங்க வரியை செலுத்திய பிறகு, கைகளைப் பயன்படுத்தாமல் தன் காலால் தடையை (barrier) தூக்கி வாகனங்களை அனுப்புவது காட்சியளிக்கிறது.
இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தானின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர். “இது தான் புதிய தானியங்கி (automatic) முறைமையா?” என்ற கேலிச் சொற்களும், சிரிப்பு எமோஜிகளும் கருத்துப் பகுதியில் குவிந்து வருகின்றன.
View this post on Instagram
அதே சமயம், சிலர் இந்த வீடியோவை ஒரு நகைச்சுவையான தருணமாகவே எடுத்துக்கொண்டு, “இப்படி ஒரு சிரிப்பு தேவை தான்” எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இத்துடன், அந்த வீடியோ 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட “லைக்குகள்” பெற்றுள்ளது.மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகிவரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
