உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுதம் மற்றும் ராணுவ உதவியை வழங்கி வருகின்றது. அதே சமயம் அந்நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. மேலும் இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தாலும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைன் போரை தொடர்ந்து நீடிக்கும் வகையிலான நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் உக்ரைனுக்கு தற்போது 2 பில்லியன் டாலர்கள் ஆயுத உதவியை வழங்குவதாக அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆயுத உதவியின் இந்திய மதிப்பு 16 ஆயிரத்து 586 கோடி 71 லட்சம் ரூபாய் ஆகும். இதனால் உக்ரைன் போர் இப்போதைக்கு முடிவுக்கு வருவதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை என்றே தெரிகிறது.