உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டின் வீரர்கள் முன் “இந்த ஆண்டும் நம்மை யாராலும் வெல்ல முடியாது. நமக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே போகின்றது” என சூளுரைத்தார். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உக்ரைனுக்கு ஆதரவை தருமாறு துருக்கி அதிபர் எர்தோகனிடம் விவாதித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது “உக்ரைன் நாட்டில் நடக்கும் கொடூரமான தாக்குதல் குறித்து நானும் ஜனாதிபதி எர்டோகனும் விவாதித்துள்ளோம். உக்ரைன் வெற்றி பெறுவதற்கு நம்முடைய ஆதரவை மேலும் அதிகப்படுத்த வேண்டும். அதேபோல் ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை துறக்க அந்நாட்டின் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஆலோசித்து வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.