சுட்டி வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய தகவலை பகிர அமெரிக்கா மறுத்துவிட்டது என சீனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த நான்காம் தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது உளவு பலூன் அல்ல என சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் அது உளவு பலூன் தான் எனக் கூறி சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.

இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்தது. இதனை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்க மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலூனை சுட்டதிலிருந்து அதனை பகுப்பாய்வு செய்வது வரை முற்றிலும் தன்னிச்சையாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.