மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், போரை நிறுத்த இஸ்ரேல் தற்போது 4 அதிரடி நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஆயுதப் பரவலைத் தடுப்பது போன்ற முக்கிய நிபந்தனைகளை இஸ்ரேல் விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு மிகவும் முக்கியமானது என்று உலக நாடுகள் கருதுகின்றன. ஈரானுடனும், இஸ்ரேலுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருவதால், மோடி நினைத்தால் இந்தப் போரைத் தடுத்து நிறுத்த முடியும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நம்புகின்றன.
குறிப்பாக, ஹோமுஸ் ஜலசந்தி (Hormuz Strait) வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் நீடிப்பதால், உலகப் பொருளாதாரமே ஆடிப்போயுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவே இந்த மோதலைத் தீர்த்து வைக்கும் ‘சமாதானத் தூதுவராக’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
