பிரபல வலைத் தொடரான ​​ஃபௌடாவில் தன்னுடைய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இஸ்ரேலிய நடிகையும், நடனக் கலைஞரும், மாடலுமான ரோனா லீ ஷிமோன், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட நான்  தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய  பேட்டியில், ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க கடுமையாக நான் உழைக்க போகிறேன். இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதனால் போரில் பங்கேற்க நான் தயாராக உள்ளேன்  என அவர் கூறிஉள்ளார்.