குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில், நேபாளத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஊர்மிளா, செல்போன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொடாசா பகுதியில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த இவர், அங்கேயே சிறிய சீன உணவு கடை நடத்தி வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக புதிய செல்போன் கேட்டு வந்த நிலையில், பண நெருக்கடி காரணமாக கணவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஊர்மிளா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
