ஆற்றின் ஓரத்தில் மிகவும் நிதானமாக அமர்ந்து, அங்கிருந்த ‘கெய்மன்’ (Caiman) வகை முதலையை மிக நெருக்கமாகப் புகைப்படம் எடுக்க ஒரு சுற்றுலாப் பயணி முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த மக்கள் கூட்டம் முதலையைப் பார்த்து சத்தம் போடவே, அந்த நபர் கோபமடைந்து “ஏன் முதலையை மிரட்டுகிறீர்கள்? அதை நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்று ஆவேசமாகக் கத்தியுள்ளார். அவர் கூட்டத்திடம் வாதிடுவதிலும், கேமராவில் கவனம் செலுத்துவதிலும் மும்முரமாக இருந்ததால், அவருக்குப் பின்னால் தண்ணீருக்கு அடியில் பதுங்கியபடி மற்றொரு ராட்சத முதலை அவரை நோக்கியே நகர்ந்து வந்ததை அவர் கவனிக்கவில்லை.
Brazilian tourist yells at crowd for “scaring the caimans” — unaware a hidden third one was swimming right at him underwater. pic.twitter.com/vSnHMC9Y5m
— The Figen (@TheFigen_) March 18, 2026
அந்தப் பயங்கரமான முதலையை கவனித்த மக்கள், “பின்னால பாரு! விலகிப்போ!” என்று அலறினர். ஒரு கட்டத்தில் அந்த முதலை மிக அருகில் வந்ததை உணர்ந்த அந்தச் சுற்றுலாப் பயணி, சட்டெனத் திரும்பிப் பார்த்துவிட்டு அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். அவர் யாருக்காகப் பரிந்து பேசினாரோ, அதே முதலையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பியது காண்போரை அதிர வைத்துள்ளது. “விலங்குகளிடம் இரக்கம் காட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும், அவற்றின் வேட்டை குணத்தை மறந்துவிடக் கூடாது” என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
