தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் இயக்கத்தில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் 150 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் வெளிநாட்டில் மட்டும் துணிவு திரைப்படம் இதுவரை 45 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.