தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. பொங்கலுக்கு இவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநில முக்கிய நகரங்களில் ஒன்றாகிய விசாகப்பட்டிணத்தில் சிரஞ்சீவி வீடு கட்டப்போவதாக அறிவித்தது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தை விட்டு அவர் விசாகப்பட்டிணத்தில் வசிக்கப்போகிறார் என்ற வதந்தியும் பரவியது. அதனை பலரும் அரசியலாக்கி செய்திகளை வெளியிட்டனர்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அதுபற்றி சிரஞ்சீவி கூறியதாவது, “அங்கு ஒரு இடத்தை வாங்கினோம் என்பது குறித்து கூறினேன். இதற்கிடையில் வேறு எதுவுமில்லை. என் மகன் ராம்சரண் கோவாவில் வீடு கட்ட ஆரம்பித்து உள்ளார். தனக்கு ஊட்டியில் வீடு கட்டவேண்டும் எனும் ஆசையிருக்கிறது. அது ஏறக்குறைய தயாராகிவிட்டது. அதை முடித்த பிறகு விசாகப்பட்டிணத்திலும் வீடு கட்டலாம் என்றேன்” என்று தெரிவித்து உள்ளார்.