உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடந்து வரும் நிலையில், சீறிவரும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்பட பலர் இருந்தனர். அதோடு உதயநிதி ஸ்டாலின் உடன் நடிகர் சூரியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் “புருஸ்லீ” காளை அவிழ்த்துவிடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த புருஸ்லீயை காளையர்கள் அடக்க முடியவில்லை. இதனையடுத்து காளை வெற்றி பெற்றதாக அறிவித்து தங்க காசு உள்ளிட்ட பரசுகள் சூரிக்கு வழங்கப்பட்டது.