சிவப்பதிகாரம் திரைப்படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். இதையடுத்து குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இதற்கிடையில் திருமண விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என 2 மிகப்பெரிய இக்கட்டான சோதனைகளை சந்தித்தாலும், அதில் இருந்து மீண்டு தற்போதும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார் மம்தா மோகன்தாஸ்.
இந்தநிலையில் சமூகவலைதள பக்கத்தில் தன் 2 போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். அதில் அவரது முகத் தோற்றமே மாறிபோய் காட்சியளிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது, “ஆட்டோ இம்யூன் என்ற தன்னுணர்வு நோய் தாக்குதலுக்கு தான் ஆளாகி உள்ளதாகவும், இதனால் தனது நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதாகவும் கூறி உள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்