வாரிசு திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தன் 67வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூரலிகான் என பலர் நடிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனது தம்பி கொலை செய்யப்பட, அதற்கு காரணமானவர்களை பழி வாங்க விஜய் கேங்க்ஸ்டராக உருவெடுப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று தான் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் தன் நண்பனை கொலை செய்தவர்களை பழிவாங்க ரஜினி கேங்ஸ்டராக உருவெடுப்பார். அதன்படி ரஜினியின் பாட்ஷாவுக்கும், விஜய் 67-வது படத்தின் கதைக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் 67 வது படம் 2023 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 19ம் தேதி திரைக்கு வருகிறது..