கட்டா குஸ்தி திரைப்படத்தை அடுத்து ஆரியன், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா ரஜினி இயக்கக்கூடிய லால் சலாம் திரைப்படத்தின் வாயிலாக முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போகிறார் விஷ்ணு விஷால். இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது.
கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய எப்ஐஆர் படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி இருந்தார். இந்நிலையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் எப்ஐஆர்- 2 படம் விரைவில் உருவாக உள்ளதாகவும், இந்த படத்தை விவி ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.