சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கேண்டீனில் தான் இந்த அநியாயம் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வெளியூரில் இருந்து வேலை தேடிச் சென்னைக்கு வந்துள்ளார். அவருக்கு வேலை தருவதாகக் கூறி அழைத்துவந்த கேண்டீன் உரிமையாளர் முத்துச்செல்வன் மற்றும் அங்கிருந்த பணியாளர்கள் குணசேகரன், கார்த்திகேயன் ஆகிய மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

​இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு முத்துச்செல்வன் உட்பட மூன்று பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மாணவர்கள் கல்வி கற்கும் புனிதமான ஒரு கல்லூரி வளாகத்திற்குள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!