சென்னையில் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு, மணிகண்டன் என்ற உணவக ஊழியர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து பொறுமையிழந்த அஸ்வினி, வெறும் போலீஸ் புகாரோடு நின்றுவிடாமல், அந்த நபர் வேலை பார்க்கும் உணவகத்திற்கே நேரில் சென்றுவிட்டார். அந்த நபரை அடையாளம் கண்டு, நடுரோட்டில் வைத்து ‘சகட்டுமேனிக்கு’ அடித்து உதைத்துத் தனது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார்.

​இந்த அதிரடிச் சம்பவத்தின்போது அங்கு கூடிய மக்கள் முன்னிலையிலேயே அந்த நபரை எச்சரித்த அஸ்வினி, பின்னர் அவரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஒரு நடிகையாகத் திரையில் பார்ப்பதை விட, நிஜ வாழ்க்கையில் ஒரு தைரியமான பெண்ணாக அவர் எடுத்த இந்த அதிரடி முடிவு பல பெண்களுக்கும் ஒரு ஊக்கத்தைத் தந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வர, “தவறு செய்பவர்களுக்கு இப்படித்தான் உடனடித் தண்டனை கொடுக்க வேண்டும்” எனப் பலரும் அஸ்வினியைப் பாராட்டி வருகின்றனர்.