சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ‘டிஏசி டெவலப்பர்ஸ்’ நிறுவனம், தனது பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த அதிரடி அறிவிப்புடன், சென்னையின் முக்கியமான ஐந்து இடங்களில் சுமார் 1,000 புதிய வீடுகளைக் கட்டும் மாபெரும் திட்டத்தையும் அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. போரூர் (காட்டுப்பாக்கம் மற்றும் குமணன்சாவடி), ஓஎம்ஆர் (சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி) மற்றும் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சுங்குவார்சத்திரம் ஆகிய வளர்ந்து வரும் பகுதிகளில் இந்த வீடுகள் அமையவுள்ளன.
இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ஒவ்வொரு மனிதனின் கனவுகளும் பிறக்கும் இடமே வீடுதான். இசையை எப்படி இதயத்திலிருந்து உருவாக்குகிறேனோ, அதேபோல் அன்பால் வீடுகளை உருவாக்கும் டிஏசி நிறுவனத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
மிடில் கிளாஸ் மக்கள் முதல் சொகுசு வீடுகளை விரும்புபவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், தரம் மற்றும் நவீன வசதிகளுடன் இந்த வீடுகள் உருவாக்கப்பட உள்ளன.
இனி டிஏசி நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் விளம்பர முகமாக இசைப்புயல் ரஹ்மான் வலம் வரப்போவதால், சென்னையின் வீடு விற்பனைச் சந்தை இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.
டிஏசி டெவலப்பர்ஸ் இதுவரை 110-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
