அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக தீவிரப் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்