இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, பாரம்பரிய நம்பிக்கைகளுக்குப் பின்னால் உள்ள காரணத்தைப் பற்றி பேசுகிறது. இதில், ஒரு பெண் கதவின் தாழ்ப்பாளை ஆட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மற்றொரு பெண், “பொம்பளைப் பிள்ளைகள் தாழ்ப்பாளை ஆட்டக் கூடாது, அது வீட்டுக்கு ஆகாது” என்று கூறுகிறார். இதைக் கேட்ட முதல் பெண், “ஏன்?” என்று காரணம் கேட்கிறார். மற்றவர் “பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்” என்று பதிலளிக்கிறார். ஆனால், தாழ்ப்பாளை ஆட்டிய பெண் உண்மையான காரணத்தை விளக்குகிறார்.
“தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், அதில் உள்ள நட்டுகள் தளர்ந்து கழன்று விட வாய்ப்பு உள்ளது. இதனால், திருடர்கள் எளிதாகத் தாழ்ப்பாளை உடைத்து வீட்டுக்குள் நுழையலாம்.” இதனால் தான் பெரியவர்கள் இப்படி ஒரு விதியை வைத்தார்கள் என்று தெளிவாக விளக்குகிறார். இறுதியாக, அந்தப் பெண் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார்: “குழந்தைகளுக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதற்கான காரணத்தையும் சொல்லி வளர்க்க வேண்டும்.” இந்தக் காணொளி இப்போது வைரலாகி வருகிறது.
