பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்களைக் கவர்வதற்காக பைக் ஸ்டண்ட் செய்த இளைஞர்களின் முயற்சி விபத்தில் முடிந்தது. ஆத்திரமடைந்த அங்கிருந்த நபர், அந்த இளைஞர்களுக்குக் கன்னத்தில் அறை கொடுத்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று, ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களுடன் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு வந்துள்ளார். அவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அங்கிருந்த பெண்களைக் கண்டவுடன், அவர்களைக் கவரும் நோக்கில் அந்த இளைஞர்கள் திடீரென பைக்கை வேகமாக இயக்கி ‘ஸ்டண்ட்’ செய்ய முயன்றுள்ளனர்.

 

இளைஞர்களின் இந்த அதிரடி முயற்சி எதிர்பாராத விதமாகத் தோல்வியில் முடிந்தது. வேகத்தைக் குறைக்க முடியாமல் நிலைதடுமாறிய அவர்களது பைக், பெட்ரோல் நிரப்பும் இயந்திரத்தின்  மீது பலமாக மோதியது. இதில் இயந்திரமும், இளைஞர்களின் வாகனமும் சேதமடைந்தன.

பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கவனக்குறைவாகச் செயல்பட்டதாலும் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் கூட வந்த நபர், பைக்கை ஓட்டி வந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பொது இடங்களில் அநாகரீகமாகவும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் ‘ஸ்டண்ட்’ செய்யும் இளைஞர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.