பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டாலே என்ன பொங்கல் வைக்கலாம் என்று சிலருக்கு குழப்பமாகவே இருக்கும். எப்போதும் வீட்டில் வைக்கும் வெண்பொங்கலையும் சர்க்கரை பொங்கலையும் தவிர்த்து இம்முறை கற்கண்டு பொங்கலை முயற்சி செய்து பாருங்கள்.

கற்கண்டு பொங்கல் கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது. தற்போது கற்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்

அரிசி 500 கிராம்

சிறு பருப்பு 250 கிராம்

கற்கண்டு 500 கிராம்

பால் 500 மில்லி

முந்திரிப் பருப்பு 15

பச்சை கற்பூரம் ஒரு சிட்டிகை

உலர் திராட்சை 15

சர்க்கரை 250 கிராம்

ஏலக்காய் தூள் கால் டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் அரிசியை நன்றாக கழுவி விட்டு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சிறு பருப்பையும் கழுவியப்பின் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் ஒரு பெரிய குக்கரில் அரிசி மற்றும் சிறு பருப்பை சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் பாலை சேர்த்துக் பாலுக்கு சம அளவு தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • இதனுடன் தேவைக்கேற்ப நெய்யும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விடலாம்.
  • இரண்டு விசில் அதிக நெருப்பிலும் இரண்டு விசில் குறைந்த நெருப்பிலுமாக நான்கு விசில் வந்தவுடன் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • அத்துடன் பச்சைக் கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும்.
  • அடுத்ததாக கற்கண்டை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து அதனையும் பொங்களுடன் சேர்க்க வேண்டும்.
  • பின்னர் குறைந்த நெருப்பில் பொங்கலை நன்றாக கிளறி விடவும்.
  • இறுதியாக மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது தித்திக்கும் சுவையான கற்கண்டு பொங்கல் தயார்.