அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர் இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருந்தது ஆனால் இன்றைய தலைமுறையினர் போகி பண்டிகை அன்று மக்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் ஆகியவற்றை இருக்கின்றனர்.

அதிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ரசாயனம் கடந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசுபட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே புகையில்லா போகி கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.