காணும் பொங்கல் குறித்து நாம் அறியாத பல விஷயங்கள் உள்ளது. காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணு பண்டிகை ஆகிய பெயர்களும் உண்டு. திருமணமாகாத கன்னிப் பெண்கள் வெள்ளை துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக்கொண்டு ஓரிடத்தில் கூடுவார்கள். அந்த தாம்பலத்தில் கற்கண்டு, கரும்புத்துண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்.

பெண்கள் எல்லாரும் கும்மி அடித்து பாட்டு பாடி கொண்டு தங்களது ஊரில் இருக்கும் ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை என ஏதாவது ஒரு நீர்நிலைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபடுவார்கள். இதனையடுத்து திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள். இதே போல கணு பொங்கல் என அழைக்கப்படுவதற்கும் ஒரு காரணம் உள்ளது.

உடன்பிறந்த சகோதரர்களுக்காக பொங்கல் அன்று பெண்கள் செய்யும் வழிபாடு ஆகும். உடன் பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என சகோதரிகள் அந்த தினத்தில் வேண்டி கொள்வார்கள். அன்றைய தினம் ஆற்றங்கரையில் இரண்டு வாழை இலைகளை கிழக்கு நோக்கி பார்த்தபடி வைத்து ஐந்து வகை சாதனங்களை பரிமாறி சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டு கற்பூரம் வெற்றி வழிபட வேண்டும்.

அனைவரும் அறிந்த ஒரு விஷயம் காணும் பொங்கல் என்று உற்றார், உறவினர், நண்பர்களை பார்க்க வேண்டும். பெரியவர்களை பார்த்து ஆசீர்வாதம் வாங்குவது முக்கிய நிகழ்வாகும். பல்வேறு இடங்களில் காணும் பொங்கல் அன்று சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். வழுக்கு மரம் ஏறுதல், உடன் உறி அடித்தல் போன்ற வீர விளையாட்டுகளும் நடத்தப்படும். காணும் பொங்கல் தினம் பட்டிமன்றங்களும் நடைபெறும்.