பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் ஜனவரி 16-ஆம் தேதி மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவு தொழிலுக்கு விவசாயிகளுக்கு பெரும் துணையாக இருப்பது மாடுகள். எனவே மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளை குளிக்க வைத்து குங்கும பொட்டு வைத்து, சலங்கை கட்டி அதன் கொம்புகளில் வர்ணம் பூசி அலங்கரிப்பார்கள்.

இதனையடுத்து மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து கோலம் இட்டு சாம்பிராணி காட்டி பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பின்னர் அந்த பொங்கலை மாட்டிற்கு ஊட்டி மாட்டுப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள். நமது நாடு விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் மழையும், பனியும் அதிகமாக இருக்கும்.

இதனையடுத்து தை மாதம் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை துவங்குவதால் வெயில், குளிர் என இதமான சீதோஷ்ண நிலை நிலவும். இதுவே விதை விதைப்பதற்கான சரியான நேரம். ஏற்கனவே விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கும் அது ஏற்ற காலமாக அமையும். எனவே தை மாத பிறப்பு பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து உழவு தொழிலுக்கு விவசாயிக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மாட்டுப்பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம். எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.