ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சலை அறுவடை செய்து பயனடையும் பருவம் தான் தை மாதம். இந்த அறுவடையில் கிடைத்த பொது அரிசியை சர்க்கரை மற்றும் பால் சேர்த்து புது பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாள் பொங்கல் பண்டிகை. மகாபாரத போர் சமயத்தில் பீஸ்மச்சாரியார் எதிர்பார்த்து காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலனளிக்கக்கூடிய மாதமாகும். பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புது பானை வைத்து பொங்கல் செய்வது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் எந்தெந்த லக்னத்தில் செய்வது உகந்தது என்றால் அது மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமம் ஆகும். எனவே தை முதல் நாளன்று மகரம் மற்றும் கும்ப லக்கனங்கள் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை இருக்கும். மகரம் என்றால் தை மாதத்தையும் கும்பம் என்றால் பானையையும் குறிக்கும். எனவே நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த நேரங்களில் நாமும் கடைப்பிடித்தால் நன்மை கிடைக்கும்.

பொங்கல் காப்பு கட்ட நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10:30 மணி வரை.

பொங்கல் வைக்க உகந்த நேரம்:

காலை 6 – 7.30
காலை 9-10.30
மதியம் 12-1.30

மாட்டுப் பொங்கல்:

காலை 7.30 – 9
காலை 10.30 – 12.00

காணும் பொங்கல் வைக்க நல்ல நேரம்:

காலை 6-7.30
காலை 9 – 10.30