தமிழகத்தில் சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இதனை நம்பி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அட்டைகளை மாற்ற விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இன்னும் பலருக்கு புதிய அரிசி அட்டைகள் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில், பொங்கல் பண்டிகைக்கு அரசு அறிவித்துள்ள ₹3,000 ரொக்கப்பணம் தங்களுக்கு கிடைக்குமா என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது.
அரசு அறிவிப்பின்படி, அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. சர்க்கரை அட்டைதாரர்கள் விண்ணப்பித்திருந்தாலும், அவர்களின் கார்டு பொங்கலுக்கு முன்பாக ‘ஆக்டிவேட்’ (செயல்படுத்தப்படாமல்) செய்யப்படாமல் போனால், அவர்களுக்கு இந்தப் பரிசுத் தொகை கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், தகுதியுள்ள ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த ஆண்டு பொங்கல் பரிசை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
