பெங்களூரை சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞன் மற்றும் மனோஜ் என்ற சிறுவன் ஆகிய இருவரும் இணைந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள பைபாஸ் சாலையில் இருவரும் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த ட்ரக் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அர்பாஸ் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.