2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இலங்கை காவல்துறை பாகிஸ்தான் வீரர்களை பாரபட்சமாக நடத்தியதாகக் கூறி, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெயரில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவுடனான போட்டிக்கு பிறகு, இந்திய வீரர்களின் பைகளைச் சோதிக்காத காவல்துறை, பாகிஸ்தான் வீரர்களின் பைகளை மட்டும் இருமுறை சோதித்ததாக தாரிக் கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவியது.

ஆனால், இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி என்றும், பாகிஸ்தான் அணியினருக்கு எந்தவிதமான அநீதியும் இழைக்கப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதே வேளையில், கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் வீரர்கள் சில மறைமுகப் புறக்கணிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இங்கிலாந்தின் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, ஆசியக் கோப்பை 2025 முதல் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணி இன்று (பிப்ரவரி 21)கொழும்பில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.