ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் குறித்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர் ஒருபுறம் ரசிகர்களை மிரள வைத்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது வறுமை கலந்த போராட்டம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
மேலும் ஒரு காலத்தில் கிழிந்த காலணிகளை ஒட்டுப்போட்டு விளையாடிய ஒரு வீரர், இன்று உலகமே வியக்கும் வகையில் மிக நீண்ட சிக்ஸர்களை அடிக்கும் அதிரடி ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளது கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த எழுச்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, “ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் எங்கள் காலணிகளை நாங்களே ஒட்ட வேண்டியுள்ளது, எங்களுக்கு ஒரு ஸ்பான்சர் கிடைக்காதா?” என்று அவர் உருக்கமாகப் பதிவிட்டது நினைவுகூரத்தக்கது.
இதனால் அந்த வலிகளிலிருந்து மீண்டு வந்து, இன்று ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரராக அவர் ஜொலிப்பது பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. திறமையும் விடாமுயற்சியும் இருந்தால், காலணி கிழிந்திருந்தாலும் இலக்கை நோக்கி ஓடி வெற்றி பெற முடியும் என்பதற்கு ரியான் பர்ல் ஒரு நேரடி உதாரணமாகத் திகழ்கிறார்.
