தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார்  பள்ளிகளில் LKG முதல் 8ம் வகுப்பு வரை இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கும் கீழ் உள்ள பெற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.  rte.tn.schools.in என்ற தளத்தில் இன்று முதல் மே.18 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மே.21ல் முடிவு தெரிவிக்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தின் கீழ் LKG வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2019 முதல் 31.07.2020- க்குள்ளாகவும், ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2017 முதல் 31.07.2018க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.