தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியியாவதில் கால தாமதம் ஆகி வருவதை தொடர்ந்து இனிவரும் காலங்களில் AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குரூப்-1 முதல் குரூப் 8 வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாகவே tnpsc தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை மாற்றி புதிதாக AI Automationஎன்ற தொழில்நுட்பம் மூலமாக விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்ப மூலம் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் ஒரு சில வாரங்களில் தேர்வு முடிவுகள் அறிவித்து விடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.