உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் கடந்த 3-ம் தேதி நடந்த சம்பவம் குறித்த செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது 4 வயது சிறுவன் ஒருவன் சம்பவ நாளில் பபுள்கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அதாவது அங்குள்ள கடையில் புரூடோலா என்று கூறப்படும் கண் போன்ற வடிவில் இருக்கும் ஒரு பபுள்கம் மிட்டாயை வாங்கி சிறுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென தொண்டையில் சிக்கிக்கொண்டது. உடனே அந்த சிறுவனின் தாய் சோனாலிகா தன் மகனுக்கு தண்ணீர் கொடுத்தார். அந்த தண்ணீரை சிறுவன் குடித்தவுடன் மேலும் பபுள்கம் தொண்டையில் நடுவே சிக்கலானது.

இதனால் சிறுவன் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட நிலையில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஆனால் தொண்டையில் சிக்கி இருந்த பபுள்கம்மை எடுக்க முடியாததோடு அன்று தீபாவளி பண்டிகை என்பதால் பெரும்பாலான மருத்துவர்களை அணுக முடியவில்லை என்று உறவினர்கள் கூறினர். இதனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அதாவது குழந்தையை அடுத்தடுத்து 4 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்ற நிலையில் தொண்டையில் சிக்கியிருந்த அந்த மிட்டாயை நீக்க முடியாமல் போனது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
