நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்தான நிலையில் தனக்கு காதலன் வேண்டும் என்று விளம்பரம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தில் அழகான பெரிய வீடு எனக்கு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு காதலன் தேவை அல்லது உடன் தங்குவதற்கு ரூம் மேட் வேண்டும். எந்த குற்ற பின்னணியும் இல்லாத நபராக இருக்க வேண்டும். பூனைகளை நேசிக்க வேண்டும். எனக்கு திருமணம் முடிந்து 13 மற்றும் 15 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அவர்கள் அவர்களது தந்தையுடன் வசிப்பதால் விவாகரத்திற்கு பிறகு நான் அவர்களை சந்திக்கவில்லை. எனது பாரம்பரியத்தின் காரணமாக இஸ்ரேலியா, இத்தாலிய அல்லது யூதர்களிடம் நான் ஈர்க்கப்பட்டதை உணர்ந்து கிறிஸ்தவ காதலன் அல்லது ஆண் நண்பர் தேவை என்பதில்  உறுதியாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த விளம்பரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக நெட்டிசன்களால் பேசப்பட்டு வருகிறது.