ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மாலி  நாட்டில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதோடு உயிர் சேதங்களையும் ஏற்படுத்துகின்றனர். இது அந்நாட்டு அரசாங்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் மாலியில் உள்ள போலியோ என்னும் கிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அப்போது 17 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.