தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்கள் தொடர்பாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து விவரங்களை மறைத்துக் குறைத்துக் காட்டியிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் 115.13 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்ட விஜய், அதே சமயம் திருச்சி கிழக்குத் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் 220.15 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முரண்பாடு மிகப்பெரிய முறைகேடு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து வருமான வரித்துறை ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எழுந்துள்ள இந்தச் சொத்து விவரப் புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.