தமிழகத்தில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சமீப காலமாகவே கட்சிகளில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி கார்த்திக் மோகன் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்.
அவர் திமுகவில் இணைவதற்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் அட்டையை கைகளில் வைத்து அதனை கசக்கி எடுத்து கீழே தூக்கி எறிந்தார். அப்போது அங்கிருந்து அனைவரும் சிரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் கட்சியினர் விலகியுள்ளது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தவெகவில் இருந்து விலகி கார்த்திக் மோகன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்#election #villivakkam #karthickmohan #dmk #election2026 #ZeeTamilNews pic.twitter.com/jmvZ5Cn4In
— Zee Tamil News (@ZeeTamilNews) April 20, 2026
