பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னதாக லுலு மாலில் இளம்பெண்ணிடம் முதியவர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகள் அதிக அளவில் எழுந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை தேடி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அஸ்வத் நாராயணா(60) என்ற ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் இன்று போலீஸில் சரணடைந்துள்ளார்.