ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பியூட்டி பார்லரின் உரிமையாளர், ஊழியர்கள் குடிக்கும் தண்ணீர் கேம்பரில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒரு பொருளைக் கலப்பதை அங்கிருந்த பெண் ஊழியர்கள் கைகலப்புடன் கறாராகக் கண்டுபிடித்தனர்.
இந்த செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பெண் ஊழியர்கள், அந்த உரிமையாளரைச் சூழ்ந்து கொண்டு தங்களின் செருப்புகளால் சரமாரியாக அடித்து வெளுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பார்லரில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அந்த உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
चूरू के सादुलपुर की घटना
ब्यूटी पार्लर संचालक कैंपर में कुछ मिलते हुए पकड़ा गया
वहां मौजूद काम करने वाली लड़कियों ने इसका वीडियो बना लिया और सबक सिखाया pic.twitter.com/N5JZJ8X17j
— Gajendra Singh (@gajendra_s01) July 3, 2026
“>
இருப்பினும், பியூட்டி பார்லர் உரிமையாளர் தன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். தனது பார்லரில் தொழில் சரியாக நடக்காததால் ஆன்மீக நம்பிக்கையின் காரணமாக, பார்லர் நன்றாக இயங்க வேண்டும் என்பதற்காகவே தண்ணீர் கேம்பரில் மஞ்சள் கடுகையும் கங்கா ஜலத்தையும் கலந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதோடு எந்தவொரு போதைப்பொருளையோ அல்லது அநாகரீகமான பொருளையோ தான் தண்ணீரில் கலக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
